உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 30 டிசம்பர், 2015

அறுபடும் நம்பிக்கையின் நூலிழை.*
எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையிலிருந்து ஆரம்பமாகிறது  
எதுவொன்றும்


மாறுகிறோம்
மாறுமென்ற வார்த்தையைப் போல் மாற்றமற்று

வார்த்தை விளையாட்டாகிவிட்ட வாதத்தை எதுகை மோனையென்று உடைத்து குழந்தையின் பல்பக் குச்சிகளாக்கி கிறுக்கித் தீர்க்கிறோம்


ஒரு சிக்கல் தன்னை வடிவமைத்துக் கொள்கிற ஆடையில் போர்த்தப்படுகிறது
பகிர இடம் தராத சொல்லின் நிர்வாணம்


உருவத்திற்குப் பொருந்தா ஒன்றை
உடுத்திக் கொள்வதில் வெளுக்கத் தொடங்குகிற நூலிழை நம்பிக்கையில் மாறுகிறது
எல்லாமும்.
-ரேவா


 

0 கருத்துகள்: