உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

இருப்பின் கன்னக்கோல் வழி கசியும் வெளிச்சச் சிறகுகள்
*

எதிர்பார்ப்பின் எல்லா கதவுகளையும் இழுத்து மூடியும் கசிகிற வெளிச்சம் கன்னக்கோலென துளையிடுகிறது இருப்பை


காலடித் தடங்களை விட்டுச் செல்லாக் களவில்
தொலைத்ததைத் தேடியடைவதில்
பழைய இடத்திற்கே வந்து நிற்பது
ஒரு பெரும் இழப்பு

மறந்துவிட்டு நடந்திடத் துடிக்கும் நிலம்
கடிவாளமிட்ட நிழலென அசைகிறது
தனிமையின் பெருவெளியில்
 
திசைமாறிட பெருகும் குரல் முடைகிற கூட்டின்
கதவுகளற்ற மனம் அடைகாக்கிறது
பறப்பதற்கேற்ற சிறகுகளை

0 கருத்துகள்: