உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 31 டிசம்பர், 2015

இந்த இரவுபச்சை நரம்பில் பாயும் ரத்தமென இருக்கிறது  
இந்த இரவு  
கதை கேட்பதற்கு நிமிட முள்  
செவிகளைத் திறந்தே வைத்து

இளஞ்சூட்டின் ப்ரியம் பூத்த  
அந்த கணத்தை மட்டும் திருப்பிக் கொடு

சொற்களின் மெளனமும்  
இதயத்தின் நிமிட ஓசையும் இம்சிக்காதபடி  
இந்த இரவோடு கதை பேச வேண்டும்.0 கருத்துகள்: