
* அத்தனை நம்பிக்கைக்குப் பிறகும் சுவடற்று திரும்புகிற பாதைகள் வழித்துணையாக்கிக் கொள்கின்றன தெருவிளக்கை
எதிர்பார்ப்பின் எல்லா வாசலிலும் துக்கத்தின் சாயலோடு நிற்பவர்களை நிறமாற்றிப் பெய்கிறது மழை
ஒளியடைத்துக் கேவவிடும் இருள் தக்கவைத்திருக்கின்ற தருணத்தின் வெளிச்சம் காலத்திற்குமான தலைக்கவசம்
...

மிகுந்த அயர்ச்சிக்கே இழுத்துவந்துவிட்டாய்
நூலறுந்த பட்டமொன்றின்
திசையறியும் நோக்கோடு கிளம்பிய
பாதங்களில்
காட்டுப் பாதை வேர்பிடித்த சூட்சுமம்
அறியா கணங்களில் அவிழ்ந்து கிடக்கும் முடிச்சுகள் தெளிவற்ற தெளிவின் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டுவதாய் இங்கே குற்றங்கள் குறித்தோ குறைபட்ட மனதின்...
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
...
வேகம் கூடும் ஒரு கட்டளையின்
தீவிரத்தை
நீ உணரத்தேவையில்லை ஓடும் கால்கள் உட்காந்துகொள்வதின் சோம்பேறித்தனம் வாய்த்துவிட்ட உனக்கு அது புரியப்போவதுமில்லை நிபந்தனைகள் நீங்கிப் போவதாக இருக்க கோரிக்கைகள் மன்றாடலின் திரிபிடித்து எரியும் வலி உனக்குத் தெரியப் போவதில்லை மூர்ச்சையாக்கும் கேள்விகள் முன் பாவமன்னிப்பிற்காய் மண்டியிடும் உன்னிடம் திருச்சபை சார்பிலே சொல்கிறேன் உன் பாவங்களுக்காய் நான் வருந்துகிறேன்...
காலத்தை இழுத்து மூடும்
மூர்க்கத்தின் இழுப்பறையைக் கொஞ்சமேனும்
திற
இடம் கொள்ளா கனவின் நரைக்கு
சாயம் பூச சந்தர்ப்பம் கொடு இல்லை புழுங்கிச் சாகும் அதன் கழுத்து நரம்பை நீயே அறு வலித்துச் சாவது தான் வாய்க்குமென்றானபின் வந்தவன் கரத்திலே போவது வரம் உன் மூர்க்கத்தின் இழுப்பறையைக் கொஞ்சமேனும் திற கண்ணெட்டும் தொலைவு வரை கனவுகளைச் சேமிக்க வேண்டும் -ரேவா
...
வண்ணங்கள் மீது பழுப்பேறச் செய்யும்
வெயில்
கூர் தீட்டும் பார்வை
குறைந்த அளவுக் காட்சியின் பிடிமானம்
அனுமானக் கனவுகளில் சருகுகளின் வாசம் வெற்றுக் குதிரையை இழுத்து வர காலம் தொலைத்ததில் அஜாக்கிரதைக் காற்சிலம்பு எரித்திட அனுமதிக்கா கனவின் நகரம் கரிப்பூசிய வண்ணத்திடம் வாதாட முடியா ஊமை நாக்கு உடைந்தழுவதில் தெளிந்த வானம் மீண்டெழுதலைச் சாத்தியமாக்குகிறது -ரேவா
...
கிளம்பி விடுதல்
குறித்தான யோசனைகளை
நீயுரான்கள் சேமிக்கத் தொடங்கிவிட்டன
மடிப்புகளில் உட்கார்ந்திருக்கும் கலையா நிகழ்வுகளை உதிறியெடுத்து ஓரங்கட்ட நினைவுப் பெட்டியொன்றை தயார் செய்கிறேன் அடுக்க அடுக்க அந்தரத்தில் ஏறிக்கொள்ளும் உரையாடல்களின் பிம்பத்தில் அழுகிய பழைய நம்பிக்கையின் வாசம் யாருக்கும் தெரியாத படி அடித்த ரூம் ஸ்ப்ரே நறுமணத்தில் புதுமுகம் பூணும் துரோகம் கையசைத்துச் செல்வதாய் காட்சிப்படுத்தும்...
பிடிப்பற்ற பொழுதை அண்ணார்ந்து பார்க்கும் தேவைகளின் உத்திரத்தில் ஊஞ்சலொன்றை மாட்டிப் பார்க்கும் விவாதத்தின் நேர் எதிர் முனை நெருங்கி வந்து விலகிப் போகிறது ஆட்டிவிடும் கைகளும் ஆட்டத்தின் நூல்பிடித்த நம்பிக்கையும் சமநிலைக்கான காத்திருப்பில் கரைந்திருக்க சிக்காத வேகத்தை வசப்படுத்த இழுக்கும் தசையசைவுகளில் புடைக்கும் நரம்புகள் புதுமுகம் தறிப்பதாய் விட்ட கைகளில் விடுபட்ட அதிர்வுகள் உடைத்துப் போட்ட...
நம்பிக்கை இடைவெளிச் சுவற்றில்
படர்கிறது
ஓர் அவநம்பிக்கையின் கொடி
காற்றோட்ட வசதிக்காய் எழுப்பியதில் வழிய முளைக்கிறாய் மண் ஊட்டத்தில் விழுந்த ஒரு சொல் ஆழ வேர்பிடித்திருப்பது அறியாது படரக் கிடைத்த மெளனத்தின் பிடிக்கயிறு தூண்டுதல் வார்த்தையின் பச்சையமாய் வெளியெங்கும் படர திரும்பிப் பார்க்கும் சாத்தியமற்று எழுந்துவிட்ட அவநம்பிக்கையின் பசுமைக்குப் பின் பழுப்பு நிறத்தில் பெயரத் தொடங்குகிறது நம்பிக்கையின்...
ஏங்கித் தவிப்பதாய் பெருந்தாகம்
வார்த்தை ஊற்றைக் கையள்ளிப் பருக நாசியேறிய அவசரம் சிதறித் தெரிக்கிற எச்சில் கோவங்கள் தலைத்தட்டி அடங்கச் செய்யும் ஆளுமை நிதானத்தின் சாதிக்கு புழங்கத் தடையெழுப்ப பெருகி வீணாகும் ஊற்று குட்டைகளில் மெய்க்கும் லார்வாக்கள் உட்சென்ற வார்த்தைகள் உறிஞ்சும் ரத்தத்தில் செரிக்க இடமற்று பலவீனப்படும் பாதை மீறிக் கடப்பதாய் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு வெறும் காலில் நடந்த அவஸ்த்தைக்கு...

இரவு
இன்னும் மிச்சமிருக்கிறது
வெளிச்சம் வரையும் நிழலை
கடந்து பார்க்கும் புள்ளி
இது தானென்றுப் புலப்படத் தொடங்கையில்
உச்சியேறும் உற்சவம்
ஒளிவட்டத்தில் உட்கார்ந்து கொள்ளும்
மாயையென
இந்த இரவு
இன்னும் மிச்சமிருக்கிறது
பிறை பிறையாய்
நாம் வளர்ந்துக் கடப்போம்
பின்
அதில் ஊடேறி ஒளிர்வோம்
...
துளி ஈரம் மிச்சமிருக்கையிலே
அதை விட்டிருக்கலாம்
முடியும் வரை உறிஞ்சியெடுத்துவிட்ட பின் உலர்வுகள் பிளந்த உதடுகளை வெடிப்புகளாய் விரித்துக்காட்டியும் பருகுதல் கானல்
இருந்தும் துரத்துகின்றாய்
கைக்கெட்டா தூரத்தில் தெரிந்திடும் வார்த்தைக்காய்
போராடிப் பார்க்கும் நிலம்
மீண்டும்
மழை வேண்டி தவமிருக்கும்
நீ
மட்டும் பொழியாதிரு
உன் மாமழையை
-ரேவா
Painting : Michael...
கடந்து போவதற்குரிய வழியொன்றை
அமைத்துத் தருகிறாய்
நீள அகலங்கள் வசதிப்படாத இருப்பில்
எனதறையைக் காலி செய்யச் சொல்கின்ற
மெளனத்திடம்
பேசிச் சலிப்புற்ற வார்த்தைகளை
புது விலாசம் தேடச் சொல்லி
நிர்பந்திக்கிறாய்
ஈரங்கள் உலர்ந்ததும்
கிளம்பிவிடுவதாய் சொல்லும் உரையாடலுக்கு
காதுகொடுக்காது கதவடைக்கும்
மெளனமே
புதிய இலக்கத்தை எழுதிவிட
கடந்துபோவதற்குரிய வழியொன்றை
நீயே திறந்தும் விடுகிறாய்
- ரேவா
painting :...
தப்பித்துக்கொள்தல் இவ்வாறு தான்
நிகழ வேண்டுமா
கடமைச் சங்கிலிகள் காலில் மாட்டி
கனவின் விட்டம் பார்க்கும்
வேஷம்
உனக்குப் பிடித்திருக்கலாம்
பொய்களை மேடையேற்றி
உண்மை அன்பைப் பார்வையாளனாக்கும்
யுக்திக்கு பின்
நாளைய நாடகம் நீ பார்க்கலாம்
-ரேவா
Painting :Shann Larsso...
மழை உலர்த்த வந்த வெயில் சன்னமாய் தூவி வைத்திருக்கும் ஒளிக்கீற்றில் வெளிச்ச நடனமொன்றை அரங்கேற்றி வைக்கிறது மரக்கிளை கிளை நுனி சூடியிருக்கும் மூக்குத்தியில் ஊடுருவும் மஞ்சள் நாலாபுறமும் அதன் வர்ணம் வளர்க்க மழை சிந்திய துளியொன்றை குடித்து வளர்கிறது கிழக்கு. -ரே...
வேலையேதுமில்லை என்ற போதும் சரியான நேரம் காட்டா கடிகார முள்ளின் தலைசுற்றலுக்கு பயந்தே கிடக்கிற பொழுதுகளில் அலுவல் விசயமாய் கிளம்பும் அவசியத்தின் அவசியமற்ற மனிதர்கள் மத்தியில் எந்நேரமும் சுற்றிவருகிற முள்ளின் நொடி ஜோடித்தழுவலுக்குள் பூத்துவிடுகிறது எனக்கான நேரமும்....

கடற்பரப்பில் தவழ்ந்து வரும் சிறு அலையென
உன் கேசம், கட்டுக்குள் சிக்காத தழுவலில் அலை இழுத்துச் செல்லும் மணலென உன் பார்வை கடல் மணலில் நண்டெழுப்பும் கோடென உன் தயக்கம் சுண்டல் சிறுவனிடம் அகப்பட்ட சில்லறையாய் உன் முத்தம் இத்தனையையும் தாண்டி கடலை ரசிக்கச்சொல்லி சிரிக்கிற உன்னில் தான்...
வட்டத்தில் வரையப்பட்டவொன்றை மாற்ற நினைக்கையில் ஆதாரப்புள்ளி மட்டும் அரைவட்டம் எடுத்துக்கொள்ள
எஞ்சியவற்றை எடுத்துத்தின்னத் தொடங்கிய தனிமை பார்ப்பவற்றையெல்லாம் கேட்டு அடம்பிடிக்க எதைக்குறித்து இத்தேர்வென்று தெரியாமலே விட்டுவைத்தேன்
நாற்சுவராயினும் நான்மட்டுமிருக்கும் இவ்வுலகம் யாவரும் வந்தமர மறுக்கும் பாலையின் கோடையைக் கொடுக்க
காற்று வந்து கதைகேட்கும் மெளனம் அதை மொழிப்பெயர்க்கும் சுவர் பல்லியது...
எப்படியும் திரும்பி வந்திடுவாய்
எனும் அலட்சியத்தில்
ஆளற்ற தீவொன்றை உருவாக்கத் தொடங்கிவிட்டாய்
கண நேர யுத்தம் கவனிக்கத் தவறிய காயம் நிறுத்தியிருக்கும் இடம் மன்னிப்பை மறுதலித்த வெற்றியில் பெற்ற நரகமென்றுனக்குத் தெரிய நேரம் பிடிக்கும் கண்ணீரின் உவர்ப்போ உரையாடல்கள் உடைத்த பிம்பங்களோ கட்டுமானங்கள் தகர்ந்த நிமிடங்களின் புகைமூட்டமோ கர்வப் புரை கூடி மறைக்கும் உன் கண்களுக்குத் தெரியப் போவதில்லை ...

*
குற்ற உணர்வோடே இருக்கும் படி செய்துவிட்ட உரையாடல் வளர்க்கும் ஈரத்தில் இருண்மையின் பூஞ்சை
ஒதுங்கத் தேடும் வெளிச்சத்திலும் வழிந்து பெருகுகிற சொல் வளர்க்கும்
ஞாபகத்தில் எட்டுக்காலின் வேகம்
புழுங்கும் மனதின் வெப்பம்
வேடமிட வைக்கும் சகஜ நிலைக்குள் வியர்த்துக் கொட்டும் வார்த்தைகள் பச்சையமற்ற...

*
தொலைந்து போன நாளொன்றிலிருந்து வளரத் தொடங்கும் ரகசியங்கள் நமக்குச் சொந்தமற்றவை
அதன் கணுக்கால் கருப்பு பற்றியோ கருணையின் பாத வெடிப்பைக் குறித்தோ கவலையற்ற எச்சில் பொய்கள் நீந்தப் பழகிய தவளைக் குஞ்சுகள்
அதன் தோற்றம் மீன் குஞ்சுகளைப் போலிருப்பதில் ஒப்புக்கொண்ட பார்வைகள் நிறக் குருடின்...

* திரும்பப் பெறமுடியா காலங்கள் நிறமாறிப் பெய்கின்ற நிலத்தில் உலருவதாய் இல்லை ஒரு சொல்
எதிர்க்கேள்விகள் எழுப்ப ஏங்கும் நொடிகளில் பற்றிக்கொள்ளும் பதற்றம் விற்றுத் தீர்ந்த வசவில் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கம்
திரும்பிட முடியாதவைகளின் கையறுநிலை பூணும் கழிவிரக்கத்தை நேர்கோடுகளாக்கி வரையும்...

* ஓர் இரவைக் கடப்பது கடந்து வந்த எல்லா இருளையும் விட நீளமானது
அடர்த்தியின் அதிகபட்சம் வரை சென்றிடும் அதற்குள் மூடிய புத்தனின் கண்கள்
கிடைப்பதை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கும் நியுரானின் முதிர்ச்சி
அறிவைத் தாண்டும் லெவல் கிராசிங்கிற்கு பொருந்திப் போக முடிவதில்லை
தாண்டிடத் தூண்டும் போராட்டத்தில்...

*
சொற் சிறகில் உயரப் பறக்கும் அர்த்தங்கள் கூடு திரும்புவதில்லை
தனக்கேற்றவைகளை தகவமைத்துக் கொள்கின்ற உதிர்ந்த இறகில் ஓராயிரம் அர்த்தப் பிழைகள்
உயரங்களைத் தொடுவதில் இருக்கும் வேட்கை அற்பமாகிப் போன ஆரம்பத்தை நோக்கித் திரும்புவதும் இல்லை
பறத்தல் காத்திருப்பின் தவம் பறத்தல் நேசிப்பின் உரிமை பறத்தல்...

*
சட்டென்று முளைக்கும் வார்த்தைகள் வாதங்களுக்குரியதாய் மாறும் கணத்தின் தலைபிடித்து உட்கார்ந்திருக்கிறோம்
வெளிவந்துவிட்ட தவறுதலின் ஒட்டு மொத்தம் உரிமை கொண்டாடும் நொடிகளை அழித்திடத் துடிக்கும் போராட்டத்தில் பருவம் தப்பிப் பெய்த மழையின் உஷ்ணம்
அனலெழுப்பும் ஞாபகங்கள் கூட்டும் கனகனப்பில் மின்...

* இரண்டில் ஒன்று பார்த்தாக வேண்டிய கட்டாயத்திற்கு கையுறை அணிவித்து அழகு பார்க்கிறாய்
களவு போன ரேகைகளிலிருந்து கசிந்துவிட்ட ஆயுளை அது மீட்டெடுக்க உதவுவதாய் நம்புகிறாய்
அசெளகர்யப்படுத்தும் காத்திருப்பு கசகசக்கச் செய்யும் காலத்தை கழற்றி எறியும் படி செய்கிற அமைதியில் ஆளற்ற தீவு
பெறுவதும் தருவதும்...

* நிற்பதற்கு வசதியாய் இல்லை நிலம்
எழுந்து நடக்க ஏற்றதொரு பிடி கிடைக்கா வசதியில் வந்தமரும் வறுமைக்குள் வயிறார கொறிக்கும் சொற்களை மழைக்கு சூடாய் வறுத்துத்தரும் படி கட்டளையிடுகின்ற பிரியத்தின் குரல் கதகதப்பாய் இல்லை
ஜன்னல் தாண்டி பெய்துவிட்ட வாய்ப்பை பொய்த்துப் போகச் செய்யும் காலத்தை கருணை ததும்ப...

*
மன்றாடலின் நிறம் குறித்து வருத்தப்பட தேவையில்லை
வெள்ளை விருப்ப நிறமென்றான பின் கரிக் குளித்துப் போயிருக்கும் வாதங்கள் சபையேறப் பெய்யும் மழை பாலை பெற்ற பருவ சாபம்
பரீட்சயமற்ற ஈச்சை நிழல் புறங்கை அனத்தும் மெளன நெருடல் சிராய்ப்பில் சிக்கித் தவிப்பதாய் கோரிக்கையின் துயரம் அடங்க மறுக்கின்ற அளவில்...

*
எழுதி முடிக்கப்பட்ட கவிதை எழுதப்படாத வெள்ளைக் காகிதத்தைப் போல வெற்றுச் சொற்கள் நிரப்பி வைத்திருக்கும் ஆழத்தை கடக்க ஆவலுறும் வாசகனுக்காய் கைகளை நீட்டியே காத்திருக்கிறது
எளிமை வளர்த்துவிட்டிருக்கும் செளகர்யம் கரையில் அமர்ந்தபடி அலைமோதிச் சிரிக்கும் எண்ணங்களில் கால் நனைத்து திரும்பிவிடும்...

* நெருக்கும் காலங்கள் பரிசளிக்கும் வாதைக்குள் குரல் சூட்டைத் தேடும் ஆளற்ற குளிர் நடுக்குகிறது தூரத்தை
தொலைவுகளின் பயம் கட்டவிழ்க்கும் கதைகளுக்குள் அரூபப் பேயென அலைந்து திரிகின்ற இருப்பில் கனவின் கால்கள்
விடைபெறலை விருப்பமாக்கும் கட்டாயத்தின் கைகளைப் பற்றிக்கொள்
இதுவரை எனும் ஆயுள் ரேகை மீறுதலில்...

*
ஓர் ஒப்பீட்டிற்கு உன்னளவில் நியாயங்கள் இருக்கலாம்
எளிய உண்மை ஏழையாகும் தருணம் வசதியின் வாசலில் மாவிலைத் தோரணம்
குலைதள்ளும் சம்பிரதாயம் கூட்டிவரும் நாடகத்தில் பசை இழத்தல் கதாபாத்திரத்தின் ஊனக்கால்கள்
நொண்டிடும் காரணம் கருணை வேண்டிட பிடித்திடும் தோளில் வழுக்கு மரம்
முன்னேறும் வாய்ப்பு...

*
ஒரு கோமாளியைப் போல நிறமாற்றம் கொண்டுவிடும்
நேரங்களைக் கணக்கு வைப்பதாயில்லை
கூட்டல் கழித்தல்கள் அடித்துத் திருத்தும் பெருக்கல் விதியை வகுப்பதால் வந்துவிட்ட கணக்கின் விகிதம் சராசரிக்கு பொருந்தவும் இல்லை
என்னிடம் வராதே திரும்பிச் செல்லென்று சொல்லும்
எந்தவொரு கேள்விக்கும் முறையிடுவதுமில்லை
...

* நம்பிக்கையின் பொருட்டு நிறைவதாய் இருந்த கோப்பையைத் திருடாதே
படிந்துவிட்ட ரேகைகளை மீட்டெடுக்கும் தடயவியல் விஞ்ஞானம் பெருகிவிட்ட காலத்தில் திருட்டு கருணைக் கொலை
வலிப்பதாய் இல்லை களவு
போய் சேரும் இடத்தின் நிறைதல் எழுப்பும் கேள்விக்குள் முதல் அ வை எழுத அல்லது முதல் மிடறை பருக மன நாக்கை முறையாய்...

* தவறுதலைப் போல் தப்பித்துக்கொள்தல் அவ்வளவு சுலபமாகிவிடுவதில்லை
தினத்தின் மீதேறும் கனவும் இறந்ததின் மீதேறி காட்சிப்பிழையாக்கும் எறும்பும் சாயலில் ஒன்றென்று புரியப்போவதுமில்லை
நகர்வுகள் திடமற்று இருப்பதில் தொலைவுகள் சோதனை ஓட்டம்
முடியாததின் ஆரம்பம் முயற்சியின் தினங்களை தின்று குவிக்கிறது ஒரு...

*
நிராதரவிற்கு வெகு அருகில் இருக்கிறோம் தட்டித் தட்டி திறந்திடும் கதவும் நுழைவதற்கான வழியாய் இல்லை
நெருங்க நேரிடும் பிம்பம் அடுக்கி வைத்திருக்கும் ஆளற்ற காரணத்திற்குள் நிற்க வேண்டிய கட்டாயம் நிலைகுலையச் செய்கிறது தனிமையை
போதுமென்ற அளவு வாங்கிச் சேர்த்துவிட்ட வசவுகள் சுற்றுச் சுவரெழுப்பும்...

* நெருக்கும் காலங்கள் பரிசளிக்கும் வாதைக்குள் குரல் சூட்டைத் தேடும் ஆளற்ற குளிர் நடுக்குகிறது தூரத்தை
தொலைவுகளின் பயம் கட்டவிழ்க்கும் கதைகளுக்குள் அரூபப் பேயென அலைந்து திரிகின்ற இருப்பில் கனவின் கால்கள்
விடைபெறலை விருப்பமாக்கும் கட்டாயத்தின் கைகளைப் பற்றிக்கொள்
இதுவரை எனும் ஆயுள் ரேகை மீறுதலில்...

* வாசல் வரை வா
கைகுலுக்கு நலம் விசாரி முடிந்தால் முன்நெற்றி முத்தம் இடு
ஈரம் காய்வதற்குள் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளை ஒன்றுவிடாமல் ஒட்டிப் போ
தடங்களைத் தேடுபவர்களுக்கு அது பயன்படட்டும்
குறைசொல்வது குணச்சாயல் என்றான பின் புறக்கணிப்பிற்கு புறமுதுகு எதற்கு
வாசல் வரை வா ...

*
பெருத்தத் தனிமை அலைக்கழிக்கும் ஒவ்வொரு நிமிடத்தின் நகர்விலும் மூச்சு வாங்க உன்னை நினைத்துக்கொள்கிறேன்
நீ என் சாக்காடு நீ என் மனப்பிறழ்வு நீ என் பெருங்குரல் நீ என் மழைப் பாறை நீ என் பிரசவகாலம்
முட்டி மோதி வெளிவரும் வார்த்தைகளின் கன்னிப்பிறழ்வில் சூல்கொண்ட மெளனத்தை சுட்டெறிக்கிறது நாலாபுறமும்...

*
மனம் பிறழ்ந்தவளைப் போல் முன் நிற்கிறேன்
சிரிப்பால் என்னை கழுவு சீழ் வடியும் ப்ரியத்திற்கு தொடுகையில் கட்டிடு காயமாறாது விம்மும் வார்த்தைகளுக்குப் புன்னகையை பரிசளி வளர்ந்திருக்கும் நகங்களின் அழுக்கேறிய ரகசியகங்களை வெட்டு
நிதானி மொழிப் பழக்கு மெளனம் படர்த்தும் இருளை அகற்று கூடல் திரியேற்று
...

* ஓர் இரண்டாம் முறைக்கு இத்தனை தூரம் தேவையில்லை எழுதிப் பழகிய நம்பிக்கையின் இருட்டில் மாறிப் போன கையெழுத்து குறைபட்டுக்கொள்ள தேவையுமில்லை வேண்டுவதின் வெளிச்சம் இருளாகிப் பெருகுகையில் வசப்பட்ட நினைவு வார்த்துத் தரும் சிறுதுளியின் அடங்கா பசி அழைத்துத் தரும் தனிமைக்கு இத்தனை தூரம் தேவையில்லை ...

* கடந்துபோனவைகளை கையில் வைத்திருக்கிறேன்
பிரித்துப்பார்க்கும் ஆவலோடு கைகளைப் பற்றிக்கொள்
நீங்கும் நிமிட இடைவெளியின் பயம் விடைபெறலின் ரேகைக்குள் ஒட்டிக்கொண்டிருப்பதை ஈரம் தோய ஒற்றியெடு
கையசைப்பில் வளரும் வாத்சல்யம் பிரித்தனுப்பும் சுவாசத்தை பொறுமை தீர விட்டிழு
ஏற்றுக்கொள்ளும் பக்குவமெங்கும்
முளைத்துவிட்ட...

விதை பிடித்த நாளொன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வேர் விட்டெழுகிறது பிரியத்தின் ஊதாச் செடி விழிக்கும் பொழுதில் தெளிக்கும் நீர் உயிர் வளர்த்துச் செடியினை எழுப்ப உச்சிப் பொழுதில் உறிஞ்சும் மட்டும் ஈரம் சேமிக்கும் தண்டினை மீறி உதிரும் ஒன்றிரண்டு இலைகளின் வீழ்தலில் நுழைந்து வழிகிற காலத்தினுள் மொட்டவிழ...
வீடளவு வானம் வெறித்து பார்க்க விட்டம் சத்தமாய் பேசிப்பார்க்க மெளனம் வழித்துணையாய் வந்தவழி தனித்துழலும் வேளையில் தோள்சாய வெற்றுச்சுவர் விசாரிப்புகள் அத்தனைக்கும் விடையாய் துளிப் புன்னகையென இத்தனையும் கொடுத்து வாங்கிவந்த தொட்டிமீனின் ஜோடிக்கண்களில் எனக்காய் இருக்கிறது ஒர் உலகம் உங்கள் பார்வைக்கு எட்டாத ஒரு கவிதையைக்கொடுத்தபடி... -ரே...
ரகசியத்தின் முட்டைக்குள் அடைகாக்கப்படுகிறது
அடர்மஞ்சள் நிறத்திலான கருவொன்று
சொன்னதை சொல்லாததின் உடல் சூட்டில் வைத்துபார்வையில் பக்குவப்படுத்தி
வேறிடம் நகராது பாதுகாத்து அமர்த்தையிலே
குஞ்சொன்று கிளம்பியிருந்தது
ரகசியத்திலிருந்து
-ரே...
எனது வீட்டின் அறைக் கதவை தாழிட்டேன் அப்படியே ஜன்னலுக்கு திரையிட்டு வெளிச்சத்தைப் பூட்டினேன்
வெளியேற துடித்த துயரத்தின் காலைக் கட்டி மேசையில் அமரவைக்க இரு குவளை தேனீர் துயரத்திற்கும் எனக்குமாய் வந்து சேர்ந்தது
கொதிக்க கொதிக்க பார்த்த துயரம் ஊதி ஊதி பெரிதாக்கியது
அறையின் உக்கிரத்தை
பின்
அதுவும் காளி நடனமாட கலைக்கூத்தாடி போல் நானும் ஆடினேன்
மெல்லிய இசைகேட்கும் எனதறை இப்போது பேயிசையில்...
எப்போதும் அவன் எனக்காக இருந்தான் பெயர்கள் ஏதுமின்றி இருந்தாலும் கூட இருட்டைக் கிழித்து பார்க்கத் தருகின்ற அவனிடம்
ஆதாமுக்கான அடையாளமிருந்தது அவனதை உணராத போதும் கூட வார்த்தைகளைத் துப்பிவிடுகின்ற சுத்தத்திற்கான அறிகுறி அவனிடம் இருக்கவே செய்தது எல்லையற்று நீண்டபொழுதொன்றிலும் எல்லைக்கதவுகளுக்கு பின்னால் நிற்குமவனிடம் சொல்ல சில கதைகளும் கிளைக்காரணங்களும் வளர்ந்து கொண்டேதானிருக்கிறது ஆனாலும்...
வார்த்தை நதி வற்றிவிட்டிருந்த இடத்தில் கண்டெடுத்த கூழாங்கற்களைப் போலிருக்கிறது மெளனம்
கையிலெடுத்துக்கொள்கையில் நதி இருப்பதைப் போன்ற கானல் நாலாபுறமும் என்னை நிரப்ப நினைவின் துடுப்பசைத்து கரையேறுகையில் என் கையில் நதி இருந்தது கூழாங்கற்களை சுமந்தபடி
நன்றி : நம் தோழி...
காற்று கிழித்த ஜன்னல் திரைவழியே கசிந்து கொண்டிருக்கிறது வெளிச்சத்தின் கீற்று
ஜன்னலை கடக்கும் எதுவொன்றையும் பெரிதாய் வேடமிட்டுக் காட்டும் அதன் குணத்திற்காகவே மறுதலிக்கிறேன்
ஆனாலும் வெளிச்சத்திரை விலகுவதாயில்லை
ஜன்னல் கம்பியில் வந்தமர்ந்து வாசல் வரை தன்னை வரைந்துவிட்ட சாதுர்யத்தை எண்ணி எண்ணி திளைக்கையில் இருட்டு வந்து அப்பியிருந்தது எனதறையை.... -ரே...
முடிந்துவிட்ட பிரியத்தின் கடைசி சொட்டில்
காத்திருத்திருக்கிறது மீளமுடியா போதை தூரத்தில் அலைபேசியில் ஒளிர்கிறாள் தான்யாகுட்டி
தட்டுத்தடுமாறும் என் நினைவினை கைத்தாங்கலாய் பிடித்தபடி அழைத்துச்செல்கிறாள் வேறொரு திசைக்கு
வேறென்ன விடியும் வரை தான் எல்லாமும்....

Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
...