உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

பிறப்பின் உயரணு வார்த்தைகள்

 Photo: தவிர்க்க முடியா வார்த்தைகளோடு தான் 
எப்போதும் வருகிறாய்
ஆதி நாக்கை மழித்தலில் கிடைக்கும்
வெள்ளை கசடைப் போல் தீர்க்கமாகிறது

சர்வ நிச்சயமாய்  தொலைந்ததென்று
நம்பிய பாவனைகள்
நினைவு ஓசையின் மூலம் போக்குக்காட்ட
வேட்டை மனிதன் கண்டெடுத்த நெருப்பு 
இத்தந்திரம்

இசையப் பழகும் முன்
கண்டெடுத்த ஒலி
கற்ப வாசலைத் தொட ஓடும்
பல கோடி உயிர்ச் செல்லின் தேடலோடிருக்க

உட்சென்ற கருவைப் போல்
முன்மொழியா வார்த்தைகள்
பிறப்புக்கான பனிக்குட பாதுகாப்பாய்

~

-ரேவா

தவிர்க்க முடியா வார்த்தைகளோடு தான்
எப்போதும் வருகிறாய்
ஆதி நாக்கை மழித்தலில் கிடைக்கும்
வெள்ளை கசடைப் போல் தீர்க்கமாகிறது

சர்வ நிச்சயமாய் தொலைந்ததென்று
நம்பிய பாவனைகள்
நினைவு ஓசையின் மூலம் போக்குக்காட்ட
வேட்டை மனிதன் கண்டெடுத்த நெருப்பு
இத்தந்திரம்

இசையப் பழகும் முன்
கண்டெடுத்த ஒலி
கற்ப வாசலைத் தொட ஓடும்
பல கோடி உயிர்ச் செல்லின் தேடலோடிருக்க

உட்சென்ற கருவைப் போல்
முன்மொழியா வார்த்தைகள்
பிறப்புக்கான பனிக்குட பாதுகாப்பாய்

~

-ரேவா

0 கருத்துகள்: