உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

புதிய தாகத்தில் பறிபோன பழையதின் தடம்


*
நம்பிக்கையின் பொருட்டு நிறைவதாய் இருந்த
கோப்பையைத் திருடாதே


படிந்துவிட்ட ரேகைகளை மீட்டெடுக்கும்
தடயவியல் விஞ்ஞானம் பெருகிவிட்ட காலத்தில்
திருட்டு
கருணைக் கொலை


வலிப்பதாய் இல்லை களவு
போய் சேரும் இடத்தின் நிறைதல்
எழுப்பும் கேள்விக்குள்
முதல் அ வை எழுத
அல்லது
முதல் மிடறை பருக
மன நாக்கை முறையாய் மழித்து வை


கறையென்றான வெள்ளையைத் துறந்து
அட்சர சுத்தமாய் நிறையட்டும் புதுக்கோப்பை


சியர்ஸ்


-ரேவா

Painting : Chidi Okoye

0 கருத்துகள்: