உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 16 மே, 2015

இல்லாத ஒன்றில் இருக்கும் கவிதை


வேகம் கூடும் ஒரு கட்டளையின்
தீவிரத்தை
நீ உணரத்தேவையில்லை

ஓடும் கால்கள்
உட்காந்துகொள்வதின் சோம்பேறித்தனம்
வாய்த்துவிட்ட
உனக்கு
அது புரியப்போவதுமில்லை

நிபந்தனைகள்
நீங்கிப் போவதாக இருக்க
கோரிக்கைகள் மன்றாடலின் திரிபிடித்து
எரியும் வலி
உனக்குத் தெரியப் போவதில்லை

மூர்ச்சையாக்கும் கேள்விகள்
முன்
பாவமன்னிப்பிற்காய் மண்டியிடும்
உன்னிடம்
திருச்சபை சார்பிலே சொல்கிறேன்

உன் பாவங்களுக்காய் நான் வருந்துகிறேன்
இவர்கள் தெரிந்தே செய்கிறார்கள்
இவர்களை ரட்சியும்
ஆமென்.

-ரேவா


0 கருத்துகள்: