உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

பெருங்குரலெடுக்கும் தனிமையின் மெளனம்


*
பெருத்தத் தனிமை அலைக்கழிக்கும்
ஒவ்வொரு நிமிடத்தின் நகர்விலும்
மூச்சு வாங்க உன்னை நினைத்துக்கொள்கிறேன்


நீ என் சாக்காடு
நீ என் மனப்பிறழ்வு
நீ என் பெருங்குரல்
நீ என் மழைப் பாறை
நீ என் பிரசவகாலம்


முட்டி மோதி வெளிவரும்
வார்த்தைகளின் கன்னிப்பிறழ்வில்
சூல்கொண்ட மெளனத்தை சுட்டெறிக்கிறது
நாலாபுறமும் சூரியன்


-ரேவா

0 கருத்துகள்: