உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

தோல்வியின் தகுதிச்சுற்று
முடிந்துபோன கள்ளாட்டம் ஒன்றின்
வெற்றியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறாய்

மெளனம் புதிர்களாகும் போது
சம்மதம்
தோற்றவரின் தலைகுனிவாய் தெரியலாம்

இறந்த உடலை
இழுத்துச் செல்லும் எறும்புக்கு
மற்ற எறும்புகள் துணைவருவது
உனக்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை

நீ
முடிந்துபோன கள்ளாட்டம் ஒன்றின்
வெற்றியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாய்

-ரேவா

0 கருத்துகள்: