உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

தனி நிலம் தருவிக்கும் தட்பவெட்பம்


*

நிராதரவிற்கு வெகு அருகில் இருக்கிறோம்
தட்டித் தட்டி திறந்திடும் கதவும்
நுழைவதற்கான வழியாய் இல்லை


நெருங்க நேரிடும் பிம்பம்
அடுக்கி வைத்திருக்கும் ஆளற்ற காரணத்திற்குள்
நிற்க வேண்டிய கட்டாயம்
நிலைகுலையச் செய்கிறது தனிமையை


போதுமென்ற அளவு வாங்கிச் சேர்த்துவிட்ட வசவுகள்
சுற்றுச் சுவரெழுப்பும் வசதியில்
வெட்டவெளி


நின்று பார்ப்பதை எழுந்து நடப்பதாய்
எடுத்துக்கொண்டதும்
நடக்கும் நிலமெங்கும் முளைக்கிறது
வானம்


குளிர்
வெயில்
புயல்
மழை
தனியுடைமையானதில்
செழிக்கின்ற நிலத்தின் விஷம்
செய்யத் துணியும் காருண்யத்தின் 

இருண்மைக்குள் துணைவருகிறது 
நிராதரவின் வெளிச்சம்

-ரேவா

painting : Gerhard Richter

0 கருத்துகள்: