உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

சிவப்பு உண்டியலில் சேகரமாகும் புத்தன்
பிரிவதாய் முடிவெடுத்த கோடையில்
சிவப்பு நிற உண்டியலொன்றை பரிசளித்தாய்

சேர்த்து வைக்க புன்னகைகளின்றி
இருள் சேமிக்கும் மெளனங்களை எடுத்து எண்ண
ஏற்றவொரு நேரமற்று வெறுமையில் அமிழ்ந்திருக்கும் நம்மிடம்
சில்லறைக்கான தேவை வாய்க்கவே இல்லை

மெளனம் நிறைந்து
அறையெங்கும் வழியத் தொடங்கிய இருளால்

இரண்டாய் பிரிந்த படுக்கைக்கு நடுவே
வெளிச்சமூட்ட எடுத்து வைத்த நைட் லேம்ப்

போதி மரமாகி புத்தனை நிரப்பி வைக்கிறது
சிவப்பின் உண்டியலில்


-ரேவா

0 கருத்துகள்: