உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

தவப் புன்னகை
சிரித்தபடி இருக்கும்
லாஃபிங்க் புத்தனின் மோனநிலை
வாய்க்கா பொழுதொன்றில்
சிவப்பு நிறப் பென்சிலின் கூர்முனை
கரையும் வரை
வரைந்து பார்த்த புன்னகையில்
போதிமரம் வேர் பிடித்திருந்தது
புத்தனின் வாசத்தோடு

-ரேவா

(கீற்று.காம் 13-05-2014)

0 கருத்துகள்: