உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

இருந்ததில் இல்லாதது
கைகாட்டி கடந்து விட்ட பிரியத்தில்
கொஞ்சமாய் ஈரம் இருந்தது

கொடுத்த பறக்கும் முத்தத்தில்
உதிர்ந்த இறகொன்று கையில் இருந்தது

காற்றாகி அது கரைந்த பின்னும்
ஈரம் உலரா அச்சந்திப்பின்
இறுதிவரை என்ன இருந்தது

-ரேவா

0 கருத்துகள்: