உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

கொற்றவையாய் மழைப் பெண்
நிதானமிழந்த நேரத்தின் இருண்மையில் தான்
நிகழ்ந்தேறியது நம் ஊடல்

குளறும் நாவின் போதை குறைய
உப்பு நீர் தெளித்தும் துர்வாடை வீசும் மெளனத்தை
தாங்க முடியாது ஓட்டமெடுக்கும் மனக்கால்கள்
ஓய்ந்து களைத்த இடத்தில்

கொற்றவையாகி களி நடனமிடுகிறாள்
மழைப் பெண்

-ரேவா

0 கருத்துகள்: