உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

குளிர் பொழுதின் கையுறைக் காலம்


*
நெருக்கும் காலங்கள் பரிசளிக்கும் வாதைக்குள்
குரல் சூட்டைத் தேடும் ஆளற்ற குளிர்
நடுக்குகிறது தூரத்தை


தொலைவுகளின் பயம்
கட்டவிழ்க்கும் கதைகளுக்குள்
அரூபப் பேயென அலைந்து திரிகின்ற இருப்பில்
கனவின் கால்கள்


விடைபெறலை விருப்பமாக்கும் கட்டாயத்தின்
கைகளைப் பற்றிக்கொள்


இதுவரை எனும் ஆயுள் ரேகை
மீறுதலில் அழிந்ததைக் கோடிட்டு காட்ட விரும்பா விலகுதலை
ப்ரியத்தோடு நிகழ்த்த துணை செய்


கைக்குலுக்குதலின் வெம்மை
வழித்துணையாகும் குளிரின் கையுறைக்குள்
கதகதப்பாகட்டும் வரும் காலம்


-ரேவா

0 கருத்துகள்: