உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

பெருமழைச் சொல்லின் பேய் தாகம்
குளிர் சொற்களை 
ஐஸ் க்யூப்களாய் கேட்கும் உன்னில்
களைப்பின் வறட்சி

தாகம் தீர
நீளும் மூச்சில்
உறைந்திடும் உப்பு நீர்த்தடங்கள்
கரிக்கும் தொலைவுகளைக் கானலாக்கி
தருகிறது

கூழாங்கற்களென இவ்வாழ்வை

-ரேவா

(painting : Linda Woods)


0 கருத்துகள்: