உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 16 மே, 2015

உயிர்த்தெழும் உபரி வண்ணங்கள்


வண்ணங்கள் மீது பழுப்பேறச் செய்யும்
வெயில்
கூர் தீட்டும் பார்வை
குறைந்த அளவுக் காட்சியின் பிடிமானம்

அனுமானக் கனவுகளில்
சருகுகளின் வாசம்
வெற்றுக் குதிரையை இழுத்து வர
காலம் தொலைத்ததில்
அஜாக்கிரதைக் காற்சிலம்பு

எரித்திட அனுமதிக்கா கனவின் நகரம்
கரிப்பூசிய வண்ணத்திடம்
வாதாட முடியா ஊமை நாக்கு
உடைந்தழுவதில் தெளிந்த வானம்

மீண்டெழுதலைச் சாத்தியமாக்குகிறது

-ரேவா

0 கருத்துகள்: