உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

அழைப்பின் தொடர்பு எல்லை
அழைத்துக் கொண்டே இரு
துடிக்கும் இதயம் சற்றே இடமாறி
முகம் அருகே படபடத்துத் துடிக்கட்டும்
அதுவரை
அழைத்துக் கொண்டே இரு

மீறிக் கொண்டே இரு
தாண்டிப் போன எல்லைக் கோட்டில்
தொலைந்த உன் அளவு தெரியும் வரை
மீறிக் கொண்டே இரு

கனன்று கொண்டே இரு
ஞாபகத்தணல் கொடுக்கும் கானல் சூட்டில்
வெடிப்புகள் கிளம்பும் வரை
கனன்று கொண்டே இரு

இப்போது உரக்க மொழி
ஒழுங்கங்கெட்டவளென்று
எப்போதும் உன் மனதிற்கான சமாதானமாய் அது மாறட்டும்

சற்றே பொறு

இவ்வுணர்வை எழுதக்கூட்டிச் செல்கிறேன்
அதற்கு முன்
துண்டித்து விடாதே உன் அழைப்பை

அழைத்துக் கொண்டே இரு

-ரேவா

0 கருத்துகள்: