உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

தொட்டி மீனின் உலகம்


வீடளவு வானம்
வெறித்து பார்க்க விட்டம்
சத்தமாய் பேசிப்பார்க்க மெளனம்
வழித்துணையாய் வந்தவழி
தனித்துழலும் வேளையில் தோள்சாய வெற்றுச்சுவர்
விசாரிப்புகள் அத்தனைக்கும் விடையாய் துளிப் புன்னகையென
இத்தனையும் கொடுத்து வாங்கிவந்த
தொட்டிமீனின் ஜோடிக்கண்களில்
எனக்காய் இருக்கிறது
ஒர் உலகம்
உங்கள் பார்வைக்கு எட்டாத
ஒரு கவிதையைக்கொடுத்தபடி...


-ரேவா

0 கருத்துகள்: