உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 12 மே, 2015

நிறக்குருடின் பார்வை நீலம்


*

தொலைந்து போன நாளொன்றிலிருந்து
வளரத் தொடங்கும் ரகசியங்கள்
நமக்குச் சொந்தமற்றவை 


அதன் கணுக்கால் கருப்பு பற்றியோ
கருணையின் பாத வெடிப்பைக் குறித்தோ
கவலையற்ற எச்சில் பொய்கள்
நீந்தப் பழகிய தவளைக் குஞ்சுகள்


அதன் தோற்றம்
மீன் குஞ்சுகளைப் போலிருப்பதில்
ஒப்புக்கொண்ட பார்வைகள்
நிறக் குருடின் வர்ணங்கள்


பார்த்துப் பழகிய நிறங்கள்
அடைத்து வளர்க்கும் தொட்டிக்குள்
பிறவி நோய் ரகசியங்களின் கடலாகிறது


- ரேவா

0 கருத்துகள்: