உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

தாழிட்டுக்கிடக்கும் சம்மதம்எதற்கும் அலட்டிக் கொள்ளா இருப்பின் அறைக்கதவை
திறந்து கொள்ளச் செய்யும் பொருட்டு
சத்தமெழுப்பிய உன் வருகையின் வாசலிலே 

நின்று கொண்டிருக்கிறேன்
 

எதற்கும் அஞ்சுவதாயில்லை நீ
எதையும் அனுமதிப்பதாயில்லை நான்
சட்டென இழுத்து மூடும் முன்
உன் அனுமதியில்  அரவம் பதுங்கும் லாகவம்

பேச்சின் அனல் சீற்றம்
வார்த்தையின் இரட்டை நாவை வெளிக்காட்டி விட
மறைத்தலெனும் ஓர் அபத்த தாளம்
எதன் பொருட்டோ அறைக் கதவின் தாழ்ப்பாளாகி
எனதறையை கெட்டிப்பாக்கிட இசைகையில்

எவர்க்கும் அனுமதியில்லை என்பதன் பொருட்டு
முடிகிறாய் நீ
உன் வருகையோடே

-ரேவா

0 கருத்துகள்: