உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

பார்வையற்றவரின் வெளிச்சப் பழக்கம்பேய் இருட்டை
கடந்து வரும் படியான பழக்கத்தை
ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறாய்

அனுமானங்களின் தடி
தட்டுப்படும் இடங்களைத் தாண்டும்
வழி

பிழை கூடி நிறுத்தும் இடம்
வக்கற்ற பார்வைக்கு வாய்த்ததென்ற மனக்கணக்கில்
நிகர் செய்யப்பட

எதிர்வருகைக்கு ஏற்புடைய
ஓசையில்
திறந்து கொள்கிறது
எல்லோருக்குமான வெளிச்சம்

-ரேவா

(painting : Cindy Robinson )

0 கருத்துகள்: