உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 16 மே, 2015

மிச்சத்திலிருக்கும் வானம்

 


இரவு
இன்னும் மிச்சமிருக்கிறது

வெளிச்சம் வரையும் நிழலை
கடந்து பார்க்கும் புள்ளி
இது தானென்றுப் புலப்படத் தொடங்கையில்
உச்சியேறும் உற்சவம்
ஒளிவட்டத்தில் உட்கார்ந்து கொள்ளும்
மாயையென
 இந்த இரவு
இன்னும் மிச்சமிருக்கிறது

பிறை பிறையாய்
நாம் வளர்ந்துக் கடப்போம்
பின்
அதில் ஊடேறி ஒளிர்வோம்

-ரேவா

0 கருத்துகள்: