உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

தட்டுங்கள் திறக்கப்படும்அழைத்துக் கொண்டே இருக்கும் நிமிடங்களின் 
இடைவெளியில்
அகாலமொன்று வாசல் திறந்துவிடுகிறது 


வருவதற்கும் போவதற்குமான பாதையை 

கடந்து செல்ல மிச்சமிருக்கும் நம்பிக்கையில்
திறந்து கொள்கிறாய்

இருப்பின் ஒரு கதவு
இங்கே இழுத்து மூடப்படுகிறது

-ரேவா

0 கருத்துகள்: