உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

மழை ஈரம்


மழை வடிந்துவிட்டிருந்த இரவில்
அறையெங்கும் நிறைந்திருந்த ஈரம்
முத்தங்களாய் வளர்ந்து
முத்தங்களை வளர்த்து
பெரும் மழையாய் மாறியிருந்தது


மின்விசிறியின் வியர்வை துரத்தும் ஓசையும்
விடிபல்பின் தூங்கா பார்வையும்
பித்தேறி அனற்றும் வார்த்தைகளும்
மழையிசையின் துவக்க கணங்களைப்போல் தோன்றிட


அடித்துபெய்த மழையின் குறிப்பினை
ஈர நிலத்தை போல் ஏந்தி நிற்கிறது
இங்கோர் காதல்

0 கருத்துகள்: