உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

நாடோடியின் திசைக்குள் கிழக்கு

அதே இரவு தான்
பூட்டிய வீட்டை கடக்கும் நாடோடியைப்போல்
கவனம் பெறுகிறது இன்றும்

எதிர்கொள்ள வேண்டி சமைந்து கிடக்கும் பகலுக்காய்
திண்ணையிலே தங்கச் சொல்கிறது

நடுநிசியில் கிளைவிரித்துக் கிடக்கும்
அமானுஷ்யத்தின் பிடிச்சிக்கலில்
நினைவுப்பேய் சிக்குண்டிருப்பது
ஆறுதலாய் இருக்கிறது இப்பொழுதுக்கு

அந்நேரத்தில்
பறவையொன்று எழுப்பும் குரல்
தொலைவு நோக்கி பயணப்படுமென்னை
விடிந்துவிட்டதாய் நம்பச்சொல்கிறது.


-ரேவா

0 கருத்துகள்: