உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

ஈர உரையாடலின் பூஞ்சைப் பொழுதுகள்நீண்ட ஒர் இரவில்
விழிகளின் வெளிச்ச எல்லையை மீறி
கண்கள் நிலைத்திருந்தன

சமாதானமற்ற வாக்குறுதிகள் மீறப்பட்டதன் வலி
இருள் அடைக்கும் வரை கேவுதல்
கேட்க முடியாது தொடர

பின்பொழுதின் விழிகள் வாசித்து அயர்ந்ததில்
உண்டான கருவளையத் தடம் மறைய
வட்ட வட்ட வெள்ளரியாய் நினைவின்
ஈரம் பரவுகையில்

நம்பிக்கையற்ற உன் மறு உரையாடல்
ஒத்திவைக்கிறது
என் விழியின் ஈரத்தை

-ரேவா

(கீற்று.காம் -10-05-2014)

0 கருத்துகள்: