உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

சிறு துளியில் ஒளிந்திருக்கும் கடல்


*
ஓர் ஒப்பீட்டிற்கு உன்னளவில் நியாயங்கள் இருக்கலாம்

எளிய உண்மை ஏழையாகும் தருணம்
வசதியின் வாசலில் மாவிலைத் தோரணம்


குலைதள்ளும் சம்பிரதாயம் கூட்டிவரும் நாடகத்தில்
பசை இழத்தல்
கதாபாத்திரத்தின் ஊனக்கால்கள்


நொண்டிடும் காரணம் கருணை வேண்டிட
பிடித்திடும் தோளில்
வழுக்கு மரம்


முன்னேறும் வாய்ப்பு பறிபோகும் நீர்மையில்
ஆழ வேர்பிடித்த பாசி
கற்றுத்தரும் சலனத்தில் முளைக்கிறது கடல்– ரேவா

நன்றி : திண்ணை.காம்

0 கருத்துகள்: