உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

திரி பிடித்தெழும் உறவின் வெளிச்சக் கனவு


*
நான் திரிந்து நாமென்ற ஒற்றைத் திரி
வெளிச்சமாக்கிய இருளை
அகல்விளக்கின் பத்திரத்தோடு
ஒரு கனவிலிருந்து எடுத்து வருகிறேன்


கையாள்வதின் பிசுபிசுப்பு
ஒட்டிக்கொண்டிருக்கும் ரேகையில்
எண்ணெயின் நறுமணம்


வழுக்கும் அத்தனையையும் வாரிக்கொள்ளும் தீவிரம்
காற்றின் இசைக்கு பணியும் சுடரின் அசைவு

ஆடும் பிம்பத்தை ஆட்டுவிக்கும் வெளிச்சம்
அசைய மறுத்து இருள் குடிக்கையில்
கருகிய திரி எழுப்பும் ஞாபக நாசியில்
கனவின் வாசம்


-ரேவா

0 கருத்துகள்: