உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

உடைபடும் வண்ணங்களில் சிதறும் இரவுகள்


*
இதே போன்றதொரு வருடத்தின் கடைசியில்
வண்ணபலூன்களில் வயிறு முட்டும் அளவு
காற்றைச் செலுத்தி
ஆகாயத்தில் அலைய விட்ட காலங்களை
ஒரு மாத்திரையோடு விழுங்கிக்கொண்டிருக்கிறேன்


ஒரு வருடத்தை ஓர் இரவில் கடப்பதென்பது
அவ்வளவு எளிதில்லை என்பதைப் போல்
வெறித்துப் பார்க்கும் அந்த நீல பலூனை
ஊதி பெரிதாக்குகிறேன்


நீயற்ற இந்த கானகம்
நித்திய அமைதியில் இருக்கிறது


நீ வந்து வரையத் தொடங்கு
இந்த இரவை
ஒரு பலூனாய்


-ரேவா
painting : Lisa Thyer

0 கருத்துகள்: