உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

மீட்டுதலின் லாகவமறியா உறவின் இசை*
யாரோ போல் என்னைப் பார்த்த நொடியில்
அறுந்து விழுந்தது உயிர் நரம்பின் வீணைத் தந்தி


மெளனம்
பெரும் மெளனம்
ஆட்டிவைக்கின்ற நம்மிடம்
அபத்த தாளங்கள் அரங்கேறிக் கொண்டிருக்க
கவனிப்பின் வாசலில் யார் யாரோ பார்வையாளர்கள்


வழக்கம் போல் நீயே மீட்டுகின்றாய்
இசைக்குறிப்புகள் பற்றிய பிரக்ஞையற்று


மீட்டலின் லாகவம் வாய்த்துவிட்ட கரங்களுக்கு
அறுந்துவிட்ட கம்பி
வெட்டப்பட்ட கைநரம்பு


பிழைத்தலில் பிறந்திடும் இசையில்
சுருள் சுருளாய் ரத்தவாடை


- ரேவா

நன்றி :கீற்று.காம்

painting : Brenda Maddox

0 கருத்துகள்: