உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

திறந்துகொள்ளும் வழியின் தூரம்*
உன்னைச் சந்திப்பதற்கான அனுமதியோடு
அகாலங்கள் கதவுகளான
தேசத்திலிருந்து வந்திருக்கிறேன்


குறித்த நேரம் வரும் வரை
காத்திருக்கச் சொல்கிற பணிப்பெண்ணை
கருணையோடு பார்த்துவிட்டு
செய்தித்தாள்களைப் புரட்டும்
கண்ணில்
காதல் தொற்றி கொலையெனும் சம்பவம்
நிகழ்ந்திடாதிருக்க பிரார்த்திக்கிறேன்

நேரம் வந்துவிட்டது
அகாலத்தின் கதவை திறந்துவிட வேண்டும்


-ரேவா
நன்றி : கீற்று
Painting : Kauber-Carol


0 கருத்துகள்: