உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

அதிகாரத்தின் ஒற்றைத் தழும்பு


*
காதலை சொல்லும் முன்
நீங்கள் வேறு ஒருவராய் இருக்கிறீர்கள்


உங்களிடம் அதீத அன்பு காட்டாற்றைப் போல்
தடையில்லாது பெருகி ஓடுகிறது

 உங்கள் முகம் மரணமேற்ற உடலைப் போல்
அவ்வளவு பவித்திரம்

புன்னகையில் அத்தனை சுகந்தம்
நேசத்தில் டெடிபியரின் கதகதப்பு

பொய்களில் ஏறிக்கொள்ளும் உயரம்
உங்களிடம் பயங்களை நீக்கிவிடுகிறது
அதுவே
சாம்ராஜ்ஜியத்தை வென்றவராக
உங்களை எண்ணச் செய்கிறது


அதிகாரங்களை ஆணைப்படி செய்வதில்
தலைக்கொம்புகள் கீரிடமாகிவிட
முத்தங்கள்
அடிமையின் கால் விலங்கு


நகர்தல்களை எல்லைக்குள் வைத்திருக்க
விலங்குகளைத் தளர்த்தும்
உங்கள் லாகவத்தின் பின்
ராஜ பழக்கம்


இனி
எளிய பயணங்கள் வசதிப்படாத முத்தத்தில்
யானையின் அம்பாரி


நீளும் தொலைவு
கால் கொலுசாக்கும் இரவை
உதிர்த்துச் சிணுங்கும் காதலுக்குள்
செல்லாக் கனவு

-ரேவா

0 கருத்துகள்: