உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

எடைகூடுதலின் இடத் தேடல்பொதிமாட்டைப் போல் சுமந்துவர வேண்டியிருக்கிறது
மரத்த தோளில் பொறுமையை

அதீத சுமையில்
நுரைத்துத் தள்ளும் வார்த்தைகள்
நிலம் போய் சேர்வதில்
ஈரம் காய்ந்த வடுக்கள்

மிதித்துக் கடக்கும் பயணம்
குறிப்பெடுக்கும் மைல் கல் தூரத்தில்
இளைப்பாறல்

இடம் நோக்கி நகர
இழுத்து வரப்படும் நம்பிக்கை
லாடம் தேயும் தொலைவுகளால்
திணறும் சுமை
திறவுகளாக்கி இறக்கப்படும் வார்த்தைகளை
மென்றுகொண்டே நிற்கிறது


-ரேவா

0 கருத்துகள்: