உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

பிடி நழுவலில் சில்லுகளாகும் ப்ரியங்கள்இன்றும் அதே போன்றதொரு ஊடலில்
கவிழ்த்துகிறாய்
மேஜையில் கண்ணாடி டம்ளரை

உள்ளிருக்கும் அனல் காற்றோடு உபத்திரவமற்று தலைகுனிந்திருத்தல்
தற்செயலெனும் பாவனை
நீட்டித்துக் கொடுக்கிறது
நீண்டதொரு மெளனத்தை

நிலை விளக்கும் பார்வை
தப்பிழைக்கும் அர்த்தங்கள்
தாவியோடுகிறது
விரிப்பின் அனர்த்த மூலைக்கு

சரிசெய்திட
உதறியெடுத்த ஒன்றிணைப்பின்
பிடி நழுவல்
உடைந்து கிடக்கும் பல நூறு காட்சி
அன்றும் அதே போன்றதொரு ஊடலின்
நிரம்பி வழிந்த ப்ரியத்தின் சில்லுகளாய்

-ரேவா

(painting : Skye Taylor)

0 கருத்துகள்: