உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

அவசர சிகிச்சையின் ஆதி இருள்
எதையும் சொல்லாமல் இருக்க உன்னால் முடிகிறது

முடியாது எனும் போதும்
முடியும் என்ற எண்ணத்தின் புரை
காட்சிப்படுத்தும் காரணத்தில் தெளிவின்மை
நோய்க்கூறில் கொண்டு விட

நவீன சிகிச்சையில் செலுத்தும் ஒளிக்கற்றை
ஆதி இருளை அவிழ்த்துப் போடுகிறது

அங்கே
நிர்வாணத்தின் வெளிச்சம் குறித்தோ
காண்பது சரியென்ற கணிப்புகள் குறித்தோ
கேள்விகள்
இல்லையென்ற போதும்

வெற்றி பெற்றுவிட்ட சிகிச்சையின் முடிவை
சொல்லாமல் இருக்க உன்னால் முடிகிறது

-ரேவா

0 கருத்துகள்: