உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

பிசின் மணக்கும் வார்த்தையின் அடர் தன்மை


*
அது தான் நம் இறுதிச்சந்திப்பென்று
இதுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை


முன்னேற்றங்கள் முன்னோடியாகும் வரிசையில்
கால் கடுக்க நிற்கும் நினைவுகள்
சவலைப் பிள்ளை


பரிதாபத் தோற்றம் பார்வையாளராக்கும்
பரிதவிப்பை
தொட்டு குணமாக்கும் தீண்டலொன்றை
பத்திரமாய் வைத்திருக்கிறேன்


இறுதியாய் கசிந்த வார்த்தையின் பிசின்
பற்றிக்கொண்டிருக்கும் மனக்காட்டை
வேரழித்து தேடுகையில்
எப்படியும் சிக்கலாம்
உன் பூக்காடு
தேனருந்தும் வண்டினத்தின் ரீங்காரத்தோடு


-ரேவா

painting :Christopher Clark

0 கருத்துகள்: