உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஆதியில் அடைபடும் நகர்வில் ஈரம்


*
சொல்வதை மீறி நடந்திடத் துணியும் சம்பவத்தின் 
ஆதிப்படிக்கட்டில் பாசிவழுக்கள்

திடம் கொண்டு ஊன்றும் காலில்
நிற்கும் போதாமை
நிலைகுலைக்கும் முன்னேற்றத்தை
பிடித்துக்கொள்ளும் கையின் அனுபவப் போதாமை
அழைத்துத் தரும் வலியில்
கனவின் கருக்கலைப்பு


உதிரம் கிழிக்கும் உணர்வின் வலி
மலடாக்கும் மனதில்
அசைவுகள் அதிர்வுக்குள்ளாக்கும் வார்த்தையால்
சுமப்பது சபிக்கப்படுகையில்
வரம் இழத்தல் மா வரம் 


-ரேவா

0 கருத்துகள்: