உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

உடைந்ததில் உட்கார்ந்திருக்கும் சாத்தியங்கள்


*
மிச்சமின்றி தீர்ந்து போவதற்கான வேலைகளை
செய்து கொண்டிருக்கிறது
உன் மெளனம்


கைகளில் அள்ளித் தேக்கிடும் நினைப்பை
கைவிடும்படி ஒழுகியோடும்வார்த்தைகள்
கழுத்துச் சுருக்கோடு வருகிறது

தீர்ந்து போன பார்வை
கெட்டிப்பாக்கும் முடிச்சை
கண்ணீர்
கழன்று விழச் செய்வதில் இலகுவாகிறது
தலைகுனிவு

தற்கொலையோ
கொலையோ
உத்திரம் தாங்கும் வரை அரங்கேறட்டும்

-ரேவா

0 கருத்துகள்: