உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

தட்டியும் திறக்கா கதவின் இலக்கம்



பிழைத்தலுக்கான கதவு மூடியே இருக்கிறது

தட்டிப்பார்க்கும் தீவிரம்
கொடுக்கும் சத்தத்தில்
நிலம் அதிர
நீர் பூக்கிறது

மனதின் வாசனை அழித்து

படபடக்கும் மூச்சில்
கடந்து வந்த தூரம்
காரணமேவும் வலியில்
சரளைக் கற்கள் பதம் பார்த்த தடம்

உட்கார இடம் தேடும் காயம்
உருண்டோடும் காலத்தைச் சாட்சியப்படுத்தும்
நிராதரவு
அண்டிப் பிழைப்பதாய் நம்பிக்கை


இனி
வழியே இல்லையெனும் முடிவில்
திறந்து கொள்கிறது
கதவு 




-ரேவா

0 கருத்துகள்: