உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புரைவிழுந்த பார்வையின் தெளிவின்மை


*
நாம் இன்னும் கூட முயன்றிருக்கலாம்


முன்னேறப் பாதை
தங்கப் புதையலைத் தேடியவனைப் போல்
கொஞ்ச தூரம் தான் இருக்கிறது


ஆளாளுக்கான பார்வை மாற்றம்
புரைவிழுந்து காட்சியை மிரட்ட


முன் நிற்பது
இங்கே முக்கியமாகிறது


அவசியப்படுவதின் அவசரம்
அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை
நாம் இன்னும் கூட முயன்றிருக்கலாம்
சதுரங்கக்காய்கள் நம்மை நோக்கி நகரத்துவங்கிவிட்டது-ரேவா

ஓவியம் : Marina Rehrmann

0 கருத்துகள்: