உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

வெற்றுக் குவளை நிறைக்கும் மழை
நிராகரிப்பின் வாசலில் நிறுத்திவிட்டாய்

வெளியேறும் கணம்
மலையளவு முன்னேற்பாட்டால்
தகர்த்தெறியும் தூரத்தின் எதுவொன்றையும்


அலட்சியப்படுத்தும் பார்வையின்
ஆணவம்
இரவு மரத்தின் வெளவாலாய்

இருள் சொற்களின் துர்வாடை
கோயில் புறாக்களின்
எச்ச வாசனை கொடுத்திடாத போதும்
அவசர தரிசனத்தின் அளவுப் பணத்தால்
சுகந்தம் கமழ்வதாய்
விரும்பிச் சொல்கிறாய்

விருப்பப் பொய்
விடுபட்டு போனதில்
இலவச தரிசனத்தின் நீண்ட வரிசை

எதன் மீதும் வருத்தங்களற்ற
எதன் மீதும் புகார்களற்ற
ப்ரியங்களைக் கூண்டிலேற்றும்
அதிகாரத்தின்
பின்
அனர்த்தப் புழுக்கள்

பிடி மண்ணைப் போட்டு
கடந்து விடுதல் சுலபமென்றாலும்

நிராகரிப்பின் வாசலிலே நின்றுகொண்டிருக்கும்
மிச்ச உயிரில்
நிறைந்து கொண்டிருக்கிறது
முன் எப்போதோ பெய்த மழை

-ரேவா

0 கருத்துகள்: