உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

பச்சைக் கண்ணில் ஒளிரும் தனிமைபுழங்கா அறையின் தூசி
அடிக்கொருமுறை வரைந்து பார்க்கிறது
திசையெங்கும் நடந்து தேய்ந்த
பாதத்தின் வெடிப்பை

அணைத்து வைத்த மின்விசிறி
முடுக்கி விடும் ஆணைக்கான உத்தரவோடு
வெறித்துக் கிடக்க

பச்சை கண்ணில் ஒளிரும் இரவு
யாருமில்லையென்ற நினைப்பை
பொடித்துத் தருகிறது
எதிர்வீட்டு மிக்ஸியின் சத்தத்தோடு

நான் தனிமையில்லை
தனிமையில் நானில்லை எனும் நினைப்பில்
திறந்துகொள்கிற வாசல் வழி
வந்தமர்கிறது
தின்னக் கிடைக்கும் சில சொற்களோடு
ஊர்க் குருவி

- ரேவா

(கீற்று - 04-06-14)

ஓவியம்- chitra singh

0 கருத்துகள்: