உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

முயலாததின் ஒற்றைப்புள்ளி வரையும் சூட்சுமம்*
எதுவொன்றையும் அலட்சியப்படுத்துவதில் தான்
இது தொடங்கியிருக்க வேண்டும்

குடும்பப் புகைப்படத்தில் புன்னகை பழுப்பேறயிலே 
நாம் அதைக் கவனித்திருக்கலாம்

இப்போது
அவரவர்க்கான முகங்களைத் தேட
திசைக்கொன்றாய் கழன்று போன மாடுகள்
இலகுவாக்கிறது வேட்டையை


இது
எதுவொன்றையும் அலட்சியப்படுத்துவதிலிருந்து தான்
தொடங்கியிருக்க வேண்டும்


-ரேவா

ஓவியம் : Sabina D’Antonio

0 கருத்துகள்: