உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

போராட மறந்த நம்பிக்கையின் போக்கிடம்
*
தூக்கி வைத்துக்கொண்டே இருக்கும்
சவலைப் பிள்ளை
இத்துயரம்


இறக்கிட தேடிடும் வேலை
இட்டு நிரப்பும் அழுத்தங்கள்
ஆசனவாய்க்குள் கம்பி செலுத்தும்
வலி


வீறிட்டு அழும் பொழுதில்
மூர்ச்சையில் முடங்கும் தேம்பல்
மடிச் சுகம் காண வீரியமாகிற விஷம்
அடர்ந்து பரவுகையில்

காசித் தண்ணீரில்
யாத்திரை போகிறது
கடைசித்துளி நம்பிக்கை


-ரேவா
Painting : Debra Hurd

0 கருத்துகள்: