உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

விதையொன்றில் வேர்பிடித்த வனம்
வேதனை தரும் படியான சொல்
வீசியெறியப்பட்ட கண்ணாடி பிம்பம்

சில்லுகளாய் உடைந்து சிதறிய வாதங்கள்
ஒட்ட வைத்தலில் தொலையும் காலம்
கைம்பெண் நெற்றியின் ஸ்டிக்கர் வடு

கொடுத்ததை உடைக்கும் சடங்கு
குத்திக் கிழிக்க
குறைபட்ட மனம் இலையுதிர்க்கும் அவலம்
பேதைப் பருவத்து இளநரை

சரிசெய்யத் தொடங்கும் கரிசனம்
காட்டு வழியின் ஒற்றையடிப் பாதை

திரும்பும் திசையறியாது
தொலைந்து போகும் நாக்குகள்
எடுத்து வருகின்ற துர்கனவை
அழித்து வளர்வதாக விரிகிறது

என் வனம்

****
( Painting :Peter Dranitsin )

-ரேவா


0 கருத்துகள்: