உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

ஊனக் கால்களின் கீழ் உருகியோடும் கானலின் ஆறுதல்முடிவுகள் மீது பலமாய் நிற்க முடியா ஒட்டம்
மாட்டிக் கொண்டிருக்கும் இடம்
புதை மணல் சகதி

மீண்டு வரும் போராட்டம்
அடியெடுத்து வைக்கா முயற்சியின்
உருகி ஓடும் கண்ணீர்
உயிர் இருப்பதன் நம்பிக்கை

மீட்டுக் கொள்ள போராடும் ஆழம்
அனுபவப் பிடி தேடி அலைவதாய்
முனகலோடு முன்னேறும் தோரணை
காட்டிக் கொடுக்கும் காட்சியில்
தப்பாட்டம்

சரி செய்ய தவறியதின் சிறு சறுக்கல்
வழி தவறிய காட்டாறின் வேகம்

அடித்துச் செல்லும்
துளி நம்பிக்கை தூர் பிடித்து
மேடேறச் சொல்வதாய் உன் குரல்
சட்டென உடைக்கிறது
இதுவரை பயணித்த பாதையின் கால்மூட்டை

(painting :Pat Koscienski )

-ரேவா

0 கருத்துகள்: