உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

அரூப கால்களில் அகப்பட்ட வாசல்


தொலைவு செல்வதொன்றும்
துயரமாயில்லை

பயணப்பெட்டியில் எடுத்துக்கொண்ட ஆறுதல்
இளைப்பாற இடம் தரும் நம்பிக்கை
காலூன்றி நடக்கிறது
எதுவும் புதிதில்லையென்ற சூட்டில்

எடுத்துக் கொண்ட முயற்சி
செயலற்றுப் போவதில்
அயற்சி உடைத்து பருகத்தரும்
இளநீர்த் தெம்பைப் போல்
கிளம்பிய இடத்திலிருந்து கைகாட்டும் கனவு

கடத்தியபடி இருக்கிற துளி நிழலின்
தூர் பிடித்து முளைக்கிற வாசல்
திறந்து விடுகிறது

துயரப்படுத்தும் தொலைவை

(painting :Ivan Guaderrama )

-ரேவா

0 கருத்துகள்: