உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

சொல் படலத்தின் ஓசோன் பொத்தல்
*
இம்முறையும் அதையே சொல்ல வைக்கின்றாய்

ஊற்றுவதற்குரிய கோப்பை யூகத்தால் நிரம்பி வழிய
பேசியவை
செரிமானத்திற்கு வழியற்ற வாதங்கள்


பசிக்கும் பார்வைக்கு பதில் கேட்கின்றாய்
பழகியவை செழிப்பாக்கிய பதற்றத்தை
புசிக்கத் தருகின்றேன்


மிக நிதானமாய் சம்பவங்களைப் பிரித்து
வழியும் வாதத்தில் முக்கியெடுக்க

ஆடை விழுந்த காலத்தை
பிழையென காட்டி நகர்கின்றாய்


அடையவியலா சூட்டை மெளனத்தில் அடைத்து
யாரும் பருகாதபடி இறுக மூடுகின்றேன்


தொடர்ந்து
அதே வாதத்தை அதே த்வனியில்
ஊற்றக் கேட்கும் நாடகத்தில் நிதானமிழக்கும் கோப்பை
நொறுங்கிச் சிதற

ஒட்டவைக்கும் நியூரானில்
ஓசோன் பொத்தல்-ரேவா 

நன்றி : கீற்று.காம் (30-11-2014) 

painting : Eric Siebenthal


0 கருத்துகள்: