உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

மழைக்கு ஒதுங்கும் கனவின் களி நடனம்அத்தனைத் துயரங்களுக்கு மத்தியிலும்
கனவைப் போல் வருகிறாய்

இருளின் கைகளைப் பற்றி
நீண்டதூரம் செல்வதாய் இருக்கின்ற
யோசனைப் புள்ளியில்
புன்னகையொன்றை மீட்டெடுக்க முடிகிறது
உன்னால்

மீள்தலின் இதழ் தொட்டு
ஒட்டிக் கொண்ட பேசாச் சொற்களில்
வனம் முளைத்த சூட்சுமத்தின்
ஆயுள் ரேகை

இன்னும் அடர்ந்து பெருகுகிறாய்
அதீத பசி
மெளனத்தின் இரவுகளை வயிறு புடைக்க
விழுங்கத் தொடங்கையில்
வேகத்தின் விக்கல்
மின்னலென விழுகிறது

கண் கூச
திறந்து மூடிய விழிக்குள்
இனி நீ வரப்போவதில்லை
என அறிந்தபடி
சடசடத்துப் பெய்கிறது
அமில மழை

-ரேவா

(painting : Cindy Robinson )

0 கருத்துகள்: